ETV Bharat / state

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! - Tiruppur district news

திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.

எடப்பாடி
எடப்பாடி
author img

By

Published : Sep 15, 2020, 5:18 PM IST

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்டவேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல் செப்.16ஆம் முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.