தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த திரு.வி.க. நகரில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
அந்த சிறுவர் பூங்கா கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையின் ஒரு பகுதியாக மூடப்பட்டது.
பொதுமுடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் சிறுவர் பூங்காக்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க உள்ளதாக அறியமுடிகிறது.
இதனைத்தொடர்ந்து, திரு.வி.க. நகரில் உள்ள சிறுவர் பூங்காவை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
நவம்பர் மாதம் முதல் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதால் பூங்காவில் பழுதடைந்துள்ள பகுதிகளை சீர் செய்யவும், சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.