ETV Bharat / state

மாணவர்கள் அடையாள அட்டை, ஹால் டிக்கெட்டை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்! - E-pass

சென்னை: மாணவர்கள் அடையாள அட்டை, ஹால் டிக்கெட்டை இ - பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC Announcement
UGC Announcement
author img

By

Published : Jul 9, 2020, 6:48 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான ஜே.இ.இ தேர்வு, மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக தேர்வுகள் ஆகியவை நடக்கவிருக்கும் நிலையில் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தேர்வுகளை நடத்தும் அனைத்து தேர்வு அமைப்புகளும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட், அடையாள அட்டைகளை, 'இ - பாஸ்' ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.
தேர்வு மையத்தின் அனைத்து இடங்களையும், கிருமி நாசினி தெளித்து, நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டும்.
மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உரிய தரமான முகக் கவசம் அணிய வேண்டும்.
தேர்வு மைய வளாகம், தேர்வு அறை போன்றவற்றில் கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.

கழிப்பறைகளில், கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததும், இருக்கைகள், மேஜைகளை, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை - போதை இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.