இது தொடர்பாக தென்னக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் 'சேது' சிறப்பு ரயில்கள் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்
அதேபோல, இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்குப் பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர்- மண்டபம் சிறப்பு விரைவு ரயில் சேவையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.