ETV Bharat / state

கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது! - சென்னை செய்திகள்

சென்னை : இளநிலை கால்நடை மருத்துவம், கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை  வெளியானது!

author img

By

Published : Nov 18, 2020, 12:46 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்.18) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டது.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு இளநிலை பட்டப்படிப்பில், கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணு மாயா என்ற பெண் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல உணவு தொழில்நுட்பம் கோழியின தொழில்நுட்பம் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தருமபுரியைச் சேர்ந்த சிவா என்ற பெண் முதலிடம் பிடித்துள்ளார்.

இணையதளம் வாயிலாக பெறப்பட்ட 15 ஆயிரத்து 580 விண்ணப்பங்களில், 13 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதள கலந்தாய்வுக்கான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.

கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 580 மாணவர்கள் பயிலலாம். கடந்த 2019-2020 ஆம் கல்வியாண்டை விட 120 மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.