ETV Bharat / state

இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 1,15,771 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி! - Compulsory free Education Act

சென்னை : இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 628 தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 மாணவர்களைச் சேர்ப்பதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,15,771 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!

author img

By

Published : Aug 27, 2020, 2:09 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத் தவிர்த்து, இதர தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நுழைவு வகுப்பில் 25 % இடங்களை மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான 25% இடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காகப் பதிவு செய்ய rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் (ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ) விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் மாணவர்களின் நிழற்படம், பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர் எனில் அதற்கான வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள 8 ஆயிரத்து 628 நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 617 பள்ளிகளில் 8 ஆயிரத்து 62 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 84 பள்ளிகளில் 873 மாணவர்களும் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்ற விவரமும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்த நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும், பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்படும்.

ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால், அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறைப்படி அக்டோபர் ஒன்றாம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் அக்டோபர் 3ஆம் தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.