ETV Bharat / state

காந்தி ஜெயந்தி போட்டியில் தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ! - இந்தி திணிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை : இந்தி திணிப்பை நிறுத்தவில்லை என்றால் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுமென மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காந்தி ஜெயந்தி போட்டியில் தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

author img

By

Published : Oct 2, 2020, 2:59 PM IST

இந்தியா முழுவதும் அக்.2 ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடுப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தி, பரிசளித்து ஊக்குவிப்பது போன்ற நிகழ்வுகள் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் காந்தி வாழ்க்கை வரலாறு புதிர் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் சார்பில் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே போட்டி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியில் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அதையே அனுப்பியுள்ளது.

அதில்," காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி மாணவர்களை ‘ஆன்-லைன்’ புதிர் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1-ந்தேதி இரவு 12 மணி வரை நடக்கிறது. 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் புதிர் போட்டி நடக்கிறது. காந்திகளின் வாழ்க்கை வரலாறு, காந்தியடிகளின் மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துருக்கள் ஆகிய தலைப்புகளில் புதிர் போட்டி நடைபெறுகிறது. மேலதிக தகவலுக்கு http://gandhiparicha.in/, https://diksha.gov.in/, https://play.google. com/store/apps/details?idicom.discovergandhi.kholkhe ஆகிய இணைய முகவரிகளில் ஆராயலாம்" என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த சுற்றிக்கைக்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், மொழியுரிமை செயல்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,"தமிழ்நாடு மாணவர்களுக்கு மகாத்மா காந்தியடிகள் பற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள்.

எஞ்சிய நாள்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக அரசும் இவ்வளவு அவசரமாக இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கின்றனர்.

இந்தி மொழி ஆதிக்க திணிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும் இல்லையெனில் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். எச்சரிக்கை" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.