ETV Bharat / state

வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பிறர் பயன்படுத்துவதை தடுக்க கோரி வழக்கு!

மதுரை : வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரிய வழக்கு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பிறர்  பயன்படுத்துவதை தடுக்க கோரி வழக்கு

author img

By

Published : Nov 11, 2020, 1:39 PM IST

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "மதுரையில் 50 விழுக்காடு வாகனங்கன ஓட்டிகள் வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்ட விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக இதனை பயன்படுத்திவருகின்றனர்.

வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

இருசக்கர வாகனங்களில் வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள பலரிடம், இது குறித்து பார் கவுன்சில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பும் போது சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிற மாநிலங்களில் அதிகளவு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து சமூகவிரோதிகள் பலர் அங்கு பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று இருப்பதும், அதை வைத்து வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் பயன்படுத்தி வருவதும் இங்கு நடைபெற்று வருகிறது.

எனவே, 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை மட்டும் வழக்குரைஞர்கள் பயன்படுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஒட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த விசாரித்த நீதிமன்றம், "குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகளவு வழக்குரைஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால் ஏன் ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டுவதை தடை செய்யக்கூடாது" என கேள்வி எழுப்பியது.

அத்துடன், இந்த வழக்கில் உள்துறை செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்த்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மேலதிக விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.