கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஞாயிறுதோறும் நடைபெற்றுவரும் வாரச் சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது.
இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வாரச்சந்தை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வளித்துள்ளன.
அந்த வகையில் ஊரக, நகர் பகுதிகளில் வாரச் சந்தைகள் இயங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, கொடைக்கானலில் வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் வாரச்சந்தை நாளை முதல்ல் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாரச்சந்தை நடைபெறும் இடத்தை கொடைக்கானல் சார் - ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர், சந்தை வியாபாரிகளுடன் கலந்தாலோசனையை சார் - ஆட்சியர் நடத்தினார்.
அரசு வழிகாட்டுதல்படி விதிமுறைகள் பின்பற்றி கடைகள் இயங்க வேண்டும் என்றும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்த தவறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.