ETV Bharat / state

'ஆசிய புக் ஆஃப் ரெக்காட்ஸ்' சாதனை படைத்த போட்டி! - Kalaignar marathon recorded in the Asian Book of Records

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற போட்டி 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனையை வென்றுள்ளது.

'ஆசிய புக் ஆஃப் ரெக்காட்ஸ்' சாதனை படைத்த கலைஞர் மாரத்தான்!

author img

By

Published : Sep 8, 2020, 2:34 AM IST

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவுகூர்ந்திடும் வகையில் "கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்" எனும் ஓட்டப் பந்தயத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட்6 ஆம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. தூரத்திற்கான மாரத்தானில் பதிவு செய்து பங்கேற்றனர்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கேற்ப அவரவர் தமது வீட்டு மாடியில் தோட்டத்தில், ட்ரட் மில்லில், ஓடி இந்த போட்டியில் பங்கேற்றனர்.

இந்தியாவில் 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது 28 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தமாக 8,541 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர்.

உலக அளவில் பேரிடர் காலத்தில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய 'கலைஞர் மெமோரியல் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்' போட்டியில் அதிகமான அளவு பங்கேற்பாளர்கள் இடம்பெற்றதால், அப்போட்டி ஆசிய சாதனையாகக் அங்கீகரிக்கப்பட்டு, 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதற்கான சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை ஆசிய புக் ஆஃ ரெக்கார்டு குழு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

இந்த மாரத்தான் பதிவுக் கட்டணமாக பெறப்பட்ட தொகையில் சேவை வரி நீங்கலாக பெறப்பட்ட ரூபாய் 23 இலட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய் கரோனா பேரிடர் நிவாரண உதவித்தொகையாக தமிழ்நாடு அரசுக்கு நாளை வழங்கப்பட உள்ளது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.