இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன். இவர் திருச்சி மன்னார்புரம் அரபிக் கல்லூரி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இன்று (ஆகஸ்ட் 4) திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மேலும் சளி மற்றும் காய்ச்சலால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து இவர், திருச்சி புத்தூர் பகுதியிலுள்ள சுந்தரம் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.