இந்தியா முழுவதும் அக்.2ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடுப்படுகிறது.
தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் 152ஆவது பிறந்தநாளை, சென்னை ராஜ்பவனில் உள்ள காந்தியடிகளின் உருவ சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புராேஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அத்துடன், சென்னை தி நகரில் இயங்கிவரும் ஹரிஜன் சேவா சங்கத்திற்கு புதிய விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஆளுநர் நிதியிலிருந்து ரூபாய் 51 லட்சத்தை அதன் மாநிலத் தலைவர் மாருதியிடம் அளித்தார்.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் இந்த சேவா சங்கத்தில் சேர்க்கப்பட்டு கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஹரிஜன் சேவா சங்கத்தில் 220 மாணவிகள் தங்கும் வகையில் புதிய மகளிர் விடுதி கட்டப்பட உள்ளது. அதற்காக ஹரிஜன் சேவா சங்கத்திற்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.