நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள சுல்தானா என்ற வனப்பகுதியில் சிலர் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சிலர் கடமான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், மணிகண்டன் , விக்னேஷ், ராஜீ ஆகியோர் காட்டுப் பன்றிக்குச் சுருக்கு வலை வைத்ததாகவும், அதில் கடமான் விழுந்து இறந்துள்ளதையும் ஒத்துக்கொண்டனர்.
பிறகு அவர்களிடமிருந்து கடமானைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா ஒருவருக்கு 25 ஆயிரம் வீதம் என்று மூன்று பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.