கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்பாசன ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி மதகு, கலங்கல், கரை, வரவுக் கால்வாய் அமைப்புகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக , சென்னையை நீர்மிகை மாவட்டமாக்க எதிர்வரும் வடகிழக்கு பருவமழை தரும் நீர்வளத்தை சேமிக்கும் வகையில் சென்னையை அடுத்துள்ள வேளச்சேரி ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டுவருகிறது.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,"நீரின்றி அமையாது உலகு.
இந்தக் கரோனா சூழ்நிலையிலும் நீர்நிலைகளை பாதுகாக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது பாராட்டிற்குரியது. சென்னை மாநகராட்சி தெற்கு பகுதி இணை ஆணையர் மருத்துவர் ஜானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நீர்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்" என தெரிவித்தார்.