மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான மழைபெய்துவந்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மேல் அமர்ந்திருந்த சில இளைஞர்கள், மதுபோதையில் உயரமான மலையிலிருந்து சறுக்கி விளையாடியதோடு தொடர்ந்து அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
மழை பெய்துகொண்டிருக்கும் போது மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுபோதையில் செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மலையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.