ETV Bharat / state

”திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது” - கே.டி.ராகவன் காட்டம் - திமுக ஸ்டாலின்

திருவண்ணாமலை : தமிழ்நாட்டிற்கு பல்வேறு துரோகங்களை இழைத்துள்ள திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்
author img

By

Published : Sep 19, 2020, 10:35 AM IST

Updated : Sep 19, 2020, 10:44 AM IST

திருவண்ணாமலை, செட்டித் தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் மண்டல நிர்வாகிகள், மாவட்ட அணியுடன் பிரிவு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்தக் கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பாஜக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேலும் இதில் பங்கேற்றார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச்செயலாளர் ராகவன் தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் பல்வேறு துரோகங்களை இழைத்துள்ள திமுக கட்சியாகட்டும், ஸ்டாலின் ஆகட்டும் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.

”தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமை, பாஜக குடியரசுத் தலைவராக நியமித்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மீண்டும் குடியரசுத் தலைவராக பதவிக்கு வருவதை எதிர்த்தவர் கருணாநிதி.

பாஜக நிர்வாகிகள்
பாஜக நிர்வாகிகள்
பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு மத்திய அரசின் தளர்வுகள்தான் காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.

கரோனா நோய்த்தொற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் வேளையில், இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாஜக மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் கலந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Sep 19, 2020, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.