கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன் தனது tக்கினைச் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' கிராமப்புறங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆளும் அரசு தேர்தலை மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தியுள்ளது. உள்ளாட்சிகளில் உள்ள பணிகளை செய்யாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் கோரவில்லை. மக்கள் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை 2011ஆம் ஆண்டு நடத்தி இருக்க வேண்டும் என்றுதான் திமுக வழக்கு தொடர்ந்தது. நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: செலவைவிட ஜனநாயக கடமைதான் முக்கியம் - வாக்களிக்க சொந்த ஊர் திரும்பிய நபர்!