ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல்: தூத்துக்குடியில் 7900 வழக்குகள் பதிவு!

தூத்துக்குடி : முழு ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட 7,900 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிமீறல் :தூத்துக்குடியில்  7900 வழக்குகள் பதிவு!

author img

By

Published : Aug 16, 2020, 2:39 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்டு மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று (ஆகஸ்ட் 16) தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். குருஸ் பர்னாந்து சிக்னலில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது, அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை எச்சரித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கை கண்காணிக்க 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. தூத்துக்குடி மாநகர் பகுதியில் மட்டும் 26 இடங்களில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கில் அவசியமின்றி வாகனங்களில் வருவோர் மீது வழக்குப்பதிவு, அபராதம் விதித்தல் போன்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரத்து 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 58 வாகனங்கள் மட்டுமே தற்போது காவல்நிலையத்தில் வழக்குக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் 25 கிலோ கஞ்சா பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முத்தையாபுரம் பாரதிநகர் அருகே திருநங்கைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துவரும் சமூகவிரோதிகள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் திருநங்கைகள் - காவல்துறையினர் இடையே கமிட்டி அமைக்கப்பட்டு வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.