ETV Bharat / state

பொதுப்பணித்துறையை கண்டித்து அணைக்கட்டில் சி.பி.ஐ போராட்டம்! - பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அக்னியாறு வடிநில கோட்டம்

தஞ்சை: ஆச்சாம்பட்டி ஐயனார் அணைக்கட்டை பராமரிக்க தவறிய பொதுப்பணித் துறையின் நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுப்பணித்துறையை கண்டித்து அணைக்கட்டில் சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 11, 2020, 1:53 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா ஆச்சாம்பட்டி கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஐயனார் அணைக்கட்டு அமைந்துள்ளது.

இந்த அணையின் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏறத்தாழ 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பானசத்திற்கு தேவையான நீரை பெற்று வருகின்றன.

கல்லணையில் இருந்து வெறும் 15 கி.மீ தொலைவில் இருந்தாலும் இந்த அணைக்கட்டு மழைநீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா சுற்று வட்டார கிராமங்களில் பொழியும் மழை நீரே இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

மழை பொழிந்து இந்த அணைக்கட்டு நிரம்பினால் ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி பகுதி கிராமங்களில் ஒரு போக நெல் சாகுபடி செய்ய இயலும் என்ற நிலையில் கடந்த 2 நாள்களாக கந்தர்வக்கோட்டைப் பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், மகிழ்ச்சியில் திளைத்திருந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கதவணைகள் மூடாமல் இருந்த காரணத்தால் தேங்கிய மழை நீர் முழுமையாக வெளியேறி வீணானது.

இந்தத் தகவலையறிந்த பூதலூர் ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், ஆச்சாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் லதா ஆகியோர் அணைக்கட்டை நேரில் சென்று ஆய்வுசெய்தனர். அப்போது, அணைக்கட்டின் ஷட்டர்கள் சரியாக மூடாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

பொதுப்பணித்துறை அலுவலர்களை தொடர்பு கொண்ட அவர்கள் இருவரும், நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள இழப்பை எடுத்துக்கூறினர். அதற்குரிய விளக்கத்தை அலுவலர்கள் அளிக்கவில்லை என அறிய முடிகிறது.

இதனையடுத்து, பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அக்னியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் அணைக்கட்டில் இது போன்ற நிர்வாக சீர்கேடுகள் தொடர்வதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.