கரோனா தொற்று சென்னையில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மாநகராட்சி முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று (ஜூன் 23) மட்டும் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 532 மருத்துவ முகாம்களில் சோதனை நடைபெற்றது. நாளுக்கு நாள் மருத்துவ முகாம்களை மாநகராட்சி அதிகரித்து வருகிறது. ஜூன் 22ஆம் தேதி 504 மருத்துவ முகாம்கள் இருந்த நிலையில், அது 532ஆக உயர்ந்துள்ளது.
இந்த 532 மருத்துவ முகாம்களில் மொத்தம் 39 ஆயிரத்து 673 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 121 பேருக்கு சிறு அறிகுறி இருந்ததால், அவர்கள் கரோனா தொற்று பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு அவர்கள் நோய்க்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது: அரசின் சுற்றறிக்கைக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு!