தமிழ்நாடு முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருந்த 551 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அண்மையில் நடைபெற்றது.
அதில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக ஐந்து பேருக்கு ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.