ETV Bharat / state

சட்டப்பேரவையாகும் கலைவாணர் அரங்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

சென்னை : கரோனா நெருக்கடி காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையாகும் கலைவாணர் அரங்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !

author img

By

Published : Aug 25, 2020, 3:18 PM IST

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 தேதி வரை நடைபெறும் வகையில் கூட்டத் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டப்படியே மார்ச் 9 ஆம் தேதியன்று கூட்டமும் தொடங்கியது.

மார்ச் 24ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றுவந்த கூட்டத்தொடர் மத்திய அரசின் முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து இடை நிறுத்தப்பட்டது. தற்போது 5 மாதங்கள் கழித்து சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையை சமூக இடைவெளியோடு நடத்த போதுமான இடவசதி இல்லாதால், கூட்டத்தை வேறிடத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

234 உறுப்பினர்கள், 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்குபெறும் வகையில் இட ஏற்பட்டை செய்திட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல பிரச்னைகளை கருத்தில் கொண்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இரண்டாவது முறையாக இன்று கலைவாணர் அரங்கில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் நேரடி கள ஆய்வு இந்த தகவலை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சட்டப்பேரவைத் தலைவர் தனபாலும் இன்று கலைவாணர் அரங்கில் ஆய்வு நடத்தினர். சட்டப்பேரவையை நடத்த போதுமான இடவசதி, காற்றோட்ட வசதி ஆகியவை குறித்து ஆய்வு செய்ததாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.