ETV Bharat / state

'அதிமுக தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' - பொன். ராதாகிருஷ்ணன் - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை; பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையில் கூட்டணி என்ற  பேச்சுக்கே இடமில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Sep 4, 2020, 8:59 PM IST

இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்திந்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணியா? பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற பேச்சுக்கே இடமில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும். குமரி நாடாளுமன்றத் தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியதில் தவறு இல்லை. குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிகார் தேர்தல் நடைபெறும்போது நடைபெறுமா, அதன் பின்னர் நடைபெறுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

வசந்தகுமார் மறைவு காரணமாக கன்னியாகுமரி தொகுதியில் அனுதாப அலை இருக்காது. 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் அதன்பின் நடைபெற்றதா என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பார்கள்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.