தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு மீதான விசாரணை சிபிசிஐடி காவல்துறையினரிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் நடத்திவந்த செல்போன் கடை இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த அந்தக் கடையை ஜெயராஜின் உறவினரான இம்ரான் (28) இன்று திறந்தார்.
அப்போது, பென்னிக்ஸ் வளர்த்துவந்த நாய் ஒன்று கடையின் வாசலில் வந்து நின்று பென்னிக்ஸின் வருகைக்காக வெகு நேரம் காத்துக்கிடந்தது.
மேலும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடைக்குள் சென்று அந்த நாய் ஏக்கத்தோடு தேடியது. பென்னிக்ஸை அன்போடும், ஏக்கத்தோடும் அந்த நாய் தேடிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.