ETV Bharat / state

கைதி உயிரிழப்பு குறித்து உடற்கூராய்வில் அதிர்ச்சிகர தகவல்! - Madurai crime news

மதுரை : மத்திய சிறைச்சாலையிலிருந்து நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட கைதி தூக்கிட்டு இறந்ததாக உடற்கூராய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

கைதி உயிரிழப்பு குறித்து உடற்கூராய்வில்  அதிர்ச்சிகர தகவல் வெளியானது!

author img

By

Published : Nov 2, 2020, 10:45 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்த வடபழஞ்சி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் திருப்பதி.

2019ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாகமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவராக திருப்பதி குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு நேற்று (நவ. 01) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வலி அதிகமாகவே அவரை மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிறைக் காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

அங்கு கைதி திருப்பதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் நடந்த உடற்கூராய்வில் கைதி திருப்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.