ETV Bharat / state

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம் - Arrear exams are conducted online

சென்னை : 2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில், பொறியியல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

author img

By

Published : Sep 12, 2020, 9:46 PM IST

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இறுதி செமஸ்டரில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்.

இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது பொறியியல் படிப்புகளில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம்.

மாணவர்கள் வருகின்ற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தி தேர்வுக்காக பதிவு செய்யலாம். அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும்.

அதேபோல, இறுதிஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி, செப்டம்பர் 22ஆம் தேதியன்று செய்முறை தேர்வுகளும், செப்டம்பர் 24ஆம் தேதி முதல் எழுத்துத்தேர்வுகளும் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.