அண்மையில் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை இணை இயக்குநர் பெருமாளின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே கவுண்டர் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுவருவது கவனிக்கத்தக்கது.