மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் பல்வேறு நீர்வள, நிலவளப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த பணிகளை வேளாண்மை துறை மாநில திட்ட ஆலோசகர் ஷாஜகான் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் மாதிரி திட்ட கிராமங்களில் செயல்பாடுகள், ஒற்றைச்சாளர தகவல் மையம், மண்புழு உரம் தயாரித்தல் போன்றவை குறித்து கலந்தாலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் பெறுவது குறித்து வேளாண்மை துணை இயக்குநர் சுப்புராஜ் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகி, வேளாண்மை உதவி அலுவலர் விக்னேஷ், பால்பாண்டி, அட்மா திட்ட பணியாளர்கள் ராஜதுரை, சௌந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.