திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன். இவர் திருப்பூர் வள்ளியம்மை நகர் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்திவந்தார். மத்திய அரசு அறிவித்திருந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் இவரது தொழில் நலிவடைந்தது.
இதனால் விரக்தியிலிருந்த அவர் நிறுவனத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இளைஞர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மர்மப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு!