ETV Bharat / state

பைக் ஓட்டிச்சென்றதில் தகராறு - முற்றிய வாக்குவாதத்தில் ஒருவர் கொலை: 4 பேர் கைது

திருப்பூர்: அரசு கலைக்கல்லூரி விடுதியில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Youth murder in Tiruppur
Youth murder in Tiruppur
author img

By

Published : Aug 28, 2020, 9:00 AM IST

திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விடுதியில் நேற்று (ஆக.27) காலை அருண்குமார் என்ற இளைஞர் கட்டையால் தாக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி அருண்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று (ஆக. 27) கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த முத்துக்குமாரிடம் நியாயம் கேட்பதற்காக அருண் குமார் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமார், தமிழ்ச்செல்வன், சுந்தரம், பரத்குமார் ஆகிய நான்கு பேரும் தாக்கியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் முத்துக்குமார், தமிழ்ச்செல்வன், சுந்தரம், பரத்குமார் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.