ETV Bharat / state

அரசுப் பள்ளியில் படுகாயங்களுடன் இளைஞர் உடல் மீட்பு - youth murder in government school

திருப்பூர்: கொழுமம் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவரின் உடல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

youth-body-recovery-
youth-body-recovery-
author img

By

Published : Aug 1, 2020, 9:45 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு, தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகங்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டன. அதனால் பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வி பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பள்ளி வளாகத்தில் நுழைந்தபோது, அதிகளவில் ரத்தம் தரையில் இருந்துள்ளதை கவனித்துள்ளார்.

ரத்தம் காணப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமிருந்ததால் அதனை பின்தொடர்ந்த தாமரைச்செல்வி, 50 மீட்டர் தொலைவில் படுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் குமரலிங்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

அந்தத் தகவலை அடுத்து உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காவலர்களின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கொத்தனார் என்பதும், பள்ளி வளாகத்தின் மாடியில் அவரது செல்போன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கரோனாவால் கைவிட்ட உறவினர்கள்; உடலை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.