ETV Bharat / state

போதையில் காவலரை தாக்கிய இளைஞர்கள் மன்னிப்பு

திருப்பூர்: குடி போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்கள், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இளைஞர்கள் மன்னிப்பு
author img

By

Published : Jul 5, 2019, 12:49 PM IST

திருப்பூர் எஸ்.ஏ.பி சந்திப்பு பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை போக்குவரத்து காவலர் பொன்னங்கன் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியே மதுபோதையில் வந்த இளைஞர்கள் மூவர், போக்குவரத்து காவலர் பொன்னங்கனை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த முரளி, உதயகுமார், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.

மேலும், மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மூவரும், போதையில் காவலரை தாக்கியதாகவும், தாங்கள் செய்தது தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Intro:திருப்பூர்: போதையில் போலிஸை தாக்கியதாக இளைஞர் மன்னிப்பு.
Body:திருப்பூர் எஸ்.ஏ.பி சந்திப்பில் கடந்த 30ம் தேதி மாலை முரளி என்ற இளைஞர் மதுபோதையில் போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் என்பவரை தாக்கினார். இந்த சம்பவத்தில் போலிஸை தாக்கிய முரளி, உதயகுமார், ஹரிஹரன் என்ற மூவரை கைது செய்த போலிசார் மூவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சீருடையில் இருந்த காவலரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உதயகுமார் என்பவர் தான் அன்று போதையில் இருந்ததாகவும் காவலர்கள் தன்னை முன்னதாக பிடித்திருந்ததால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக மற்றொருவர் அடித்துக் கொண்டிருந்த போது தானும் தாக்கியதாகவும் அதற்கு மன்னிப்பும் கேட்ட விடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.