திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த 1ஆம் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷ் காதலித்த பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்கியதாலே உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.