திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் வசித்து வந்தவர்கள் அஜீத்குமார் மற்றும் முத்துலட்சுமி தம்பதியினர். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவர்கள், கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று(அக்.03) இந்த இளம்தம்பதியினரின் வீடு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே, உடுமலை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இருவரும் உடல் நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கெனவே இவர்கள் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வழக்கு: மேலும் இருவர் கைது!