திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குமாரானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், தீபாவளி நேரத்தில் தொழிலாளர் நலத்துறையின் விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதில் பாகுபாடு காட்டியதாகவும், கூடுதல் நேரம் பணி செய்ய வலியுறுத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நிறுவனத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.