திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிகளவில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
இதனிடையே இன்று (அக்.15) மாலை பல்லடம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காற்றாலை மின் உற்பத்தி செய்யும் காற்றாலை இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும், பல்லடம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இருப்பினும் காற்றாலை இயந்திரம் முற்றிலும் தீக்கிரையானது. இதன் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், மின் ஓயர்களில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத காவல் துறை: நூதன முறையில் போராட்டத்தில் இறங்கிய பெண்