திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம் எஸ் எம் ஆனந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரைப்புதூர் நடராஜனுக்கு பல்லடம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 685 பேருக்கு கரோனா தொற்று உறுதி!