ETV Bharat / state

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து  தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Aug 11, 2019, 5:37 PM IST

திருப்பூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக  570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து  தண்ணீர் திறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக 570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அமராவதி அணை வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில் அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னார், மறையூர் போன்ற இடங்களில் அதிகப்படியான மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக உயரந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் 25ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 25 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் பயன்பெறும் என்று விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

மேலும் அமராவதி அணையின் மொத்தக்கொள்ளளவு 90அடியில், தற்போது நீர் வரத்து 3023 கன அடியாக இருப்பதால், நீரின் அளவு 73.76 அடியாக உயர்ந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:உடுமலை அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக  தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 570மில்லியன் கன அடி வீதம் 15நாட்களுக்கு தண்ணீர் திறப்பு.

25000 ஏக்கர்க்கும் மேற்பட்ட புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலம் பயன்பெறும் வகையில் உயிர் தண்ணீர் திறப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில்  15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.   அமராவதி அணை கடந்த சில மாதங்களாக வறட்சியாக காணப்பட்ட நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளான  பாம்பாறு தேனாறு சின்னார் மறையூர் போன்ற இடங்களில் அதிகப்படியான மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயரந்து கொண்டிருக்கிறது.

இன்னிலையில்  புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள  கரும்பு, தென்னை  போன்ற பயிர்களை உயிர்பிக்கும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல். அமராவதி அணையின் பிரதான கால்வாய் வாயிலாக 570மில்லியன் கன அடி வீதம்  25ம் தேதி வரை 15நாட்களுக்கு உயிர் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 25000க்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் எனவே விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணையின் மொத்தக்கொள்ளளவு 90அடியில் தற்போது 73.76அடியாகவும் நீர் வரத்து 3023 கன அடியாகவும் உள்ளது. தற்போது மேற்குத்தொடர்ச்சி மலையில் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் அணை தன் முழுக்கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.