திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் கட்ட பாசனத்திற்காக கடந்த 25 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், உடுமலைப்பேட்டை பிஏபி வாய்க்காலில் பால கட்டுமான பணி நடைபெற்றதால் அப்பகுதிக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்படாமல் இருந்தது. இதனால், கடும் ஏமாற்றமடைந்த விவசாயிகள் தொடர்ந்து பால வேலைகளை நிறுத்திவிட்டு தண்ணீர் தருமாறு வேண்டுகோள் வைத்தனர். இந்த வேண்டுகோளுக்கேற்ப பால கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பால கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதும் இதனால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பாசனம் முடிவு பெற்று மூன்று மாதத்திற்குப்பிறகு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் வராத நேரங்களில் பாலம் கட்டுமானப்பணியை செய்யாமல், கடைசி நேரத்தில் செய்ததால் தான் இந்த விபரீதம் நடந்துள்ளது, என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : துட்டுக்கு தண்ணி...! - வேதனையில் பொங்கும் அகரம் மக்கள்