நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என இன்றளவும் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் ”ஓட்டு போட்டா ரஜினிக்கு மட்டும் தான்” எனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களில், ரஜினி ரசிகர்கள் எனக் குறிப்பிடப்படாமல் பொதுமக்கள் எனப் பொதுப்படையாக குறிப்பிடப்பட்டு இந்தப் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளன.
முன்னதாக, ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து அவரது உடல்நிலை காரணமாக அரசியல் நிலைபாடு குறித்து எந்த முடிவும் எடுக்கபடாத நிலையில், ”ஓட்டு போட்டா ரஜினிக்கு மட்டும்தான்” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், ரஜினி ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் ரஜினி அரசியல் பிரவேசத்தை ஊக்குவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்