திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், கலந்துகொள்வதற்காக திருப்பூர் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அஜென்டாவை வெளிப்படையாக அமல்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக மக்களை பிளவுபடுத்தும் செயலை செய்துவருகிறது. அதனை எதிர்த்துப் போராடுகின்ற மாணவர்களை, ஒருபுறம் காவல் துறையை கொண்டும் மறுபுறம் இந்து அமைப்புகளைக் கொண்டும் தாக்குதல் நடத்திவருகின்றது.
மேலும், கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கக்கூடிய நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதிமுதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ‘நீட் விவகாரத்தில் மாநில அரசின் மனு கண்துடைப்பு நாடகம்!’