ETV Bharat / state

அணைக்கு நீர் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர்: உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Dec 9, 2020, 6:26 AM IST

அணைக்கு நீர் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!
அணைக்கு நீர் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஆர். அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணைக்கு அருகே பந்தலிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின்போது, "பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த்தேக்கத் திட்டத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்புப் பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கோபி இருவரும் கேரளாவிற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கோழிப்பண்ணை முதலாளிகளுக்கும் தண்ணீரைச் சட்டவிரோதமாக விற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் மீது ஊழல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்கு நீரை முறைப்படுத்தி வழங்குவதற்கு நடுவண் மன்றத்தை அமைக்க வேண்டும்.

அணையின் முழுக் கொள்ளளவான 576 எம்.சி.எஃப்.டி. தண்ணீரை வழங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் நிர்வாகத்தைப் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நீர் மேலாண்மை ஒழுங்குகள் விதி 1994இன்படி முறையாக நடத்த வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்
போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்

மேலும், இந்தத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால், அரை நிர்வாண போராட்டம், மொட்டை அடிக்கும் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குண்டும் குழியும் நிறைந்த சாலை: மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் திருப்பத்தூர்வாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.