ETV Bharat / state

உப்பாறு அணையை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு! கிராம மக்கள் அச்சம் - ஹெலிகாப்டரில் மூலம் ஆய்வு

திருப்பூர்: உப்பாறு அணையை பாதுகாப்புப் படை உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர்.

உப்பாறு அணையின் பரப்பு முழுவதும் உள்ள சுற்று வட்டார பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வட்டமிட்டு கண்காணித்தனர்.
author img

By

Published : Jul 18, 2019, 5:28 PM IST

சூலூர் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தரை இறங்கியது. அதில் வந்த பாதுகாப்புப் படை அலுவலர்கள் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் (வயர்லெஸ்), தடங்காட்டி கருவி (ஜிபிஎஸ்) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வு நடத்தினர்.

HELICOPTER INSPECTION
உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சூலூர் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

பின்னர் உப்பாறு அணையின் பரப்பு முழுவதுமுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வட்டமிட்டு கண்காணித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த உப்பாறு பாசன விவசாயிகள் ஹெலிகாப்டர் தரை இறங்குவதை காணொலி எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

அந்தக் காணொலி தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இதனிடையே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், 'திடீரென எந்தவித முன் அறிவிப்புமின்றி ஹெலிகாப்டர் உப்பாறு அணையில் இறங்கி ஆய்வு செய்வதற்கு என்ன காரணம்?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரின் தோட்டத்தில் விமானத்தின் பெட்ரோல் டேங்கை கழற்றி விமானி ஒருவர் தரை இறக்கினார். அதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

உப்பாறு அணையை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த சூலூர் பாதுகாப்புப் படை அலுவலர்கள்

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் உப்பாறு அணை, கெத்தல்ரேவ், பனமரத்துப்பட்டி, கள்ளி வலசு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஹெலிகாப்டர் தரை இறங்குவது குறித்து தாராபுரம் சார் ஆட்சியர் முறையான விசாரணை நடத்தி கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:உப்பாறு அணையில் சூலூர் ராணுவ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்து அதிகாரிகள் ஆய்வு..

Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையில் சூலூர் ராணுவ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உப்பாறுஅணையின் நீர் பிடிப்பு பகுதியில் தரை இறங்கியது, அதில் வந்தவர்களால் அணையில் ஓயர்லெஸ், ஜிபிஎஸ், கருவிகள் உதவியுடன் ஆய்வு நடத்தினர், பிறகு உப்பாறு அணை பரப்பு முழுவதும் உள்ள சுற்று வட்டார பகுதிகளை வட்டமிட்டு பறந்து கண்காணித்தனர். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த உப்பாறு பாசன விவசாயிகள் ஹெலிகாப்டர் தரை இறங்குவதை படம்பிடித்து வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பதிவிடவே! அந்தவீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனிடையே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திடீரென எந்தவித முன் அறிவிப்புமின்றி ஹெலிகாப்டர் உப்பாறு அணையில் இறங்கி ஆய்வு செய்வதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வேறு ஏதாவது நோக்கத்திற்காக இங்கே ஹெலிகாப்டர் தரை இறக்கபடுகிறதா என்றும் கேள்வி எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயியின் தோட்டத்தில் விமானத்தின் பெட்ரோல் டேங்கை கழட்டிவிட்டு விமானி தரை இறக்கினார் அதில் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர்ச்சேதமும் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தெரிய வருவதால் உப்பாறுடேம், கெத்தல்ரேவ் பனமரத்துப்பட்டி, கள்ளி வலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தினர் பீதியடைந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் தரை இறங்குவது குறித்து தாராபுரம் சார் ஆட்சியர் அவர்கள் முறையான விசாரணை நடத்தி கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.