ETV Bharat / state

நடமாடும் திருமண மண்டபம் - அசத்தும் அலங்கார மேடை அமைப்பாளர்! - உடுமலைப் பேட்டை நடமாடும் திருமண மண்டபம்

திருப்பூர்: ஊரடங்கினால் திருமண மண்டபங்களில் திருமணத்தை விமரிசையாக நடத்த முடியவில்லையே என்ற கவலை மக்களை ஆட்கொள்ளாதபடி, அலங்கார மேடை அமைப்பாளர் ஹக்கீம் வடிவமைத்துள்ள நடமாடும் திருமணம் மண்டபம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Mobile wedding hall  திருப்பூர் செய்திகள்  நடமாடும் திருமண மண்டபம்  உடுமலைப் பேட்டை நடமாடும் திருமண மண்டபம்
நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கிய அலங்கார மேடை அமைப்பாளர்
author img

By

Published : Jul 14, 2020, 1:55 PM IST

Updated : Jul 14, 2020, 3:06 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுப காரியங்களுக்கு அலங்கார மேடைகளை அமைத்துத் தரும் தொழிலைச் செய்பவர் ஹக்கீம். இந்த கரோனா ஊரடங்கில் கோயில்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை மூடப்பட்டுவிட்டன. இதனால், திருமணங்கள் எளிய முறையில் குறைந்த அளவிலான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுவருகின்றன.

தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று எண்ணிய பெற்றோர்கள் சிலர், தங்கள் மன வேதனைகளை ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹக்கீமிடம் வரும் வாடிக்கையாளர்களும், ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்படும் திருமணம் ஏனாதானோ என்று நடைபெறுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

நடமாடும் திருமண மண்டபம்

இதை முக்கியப் பிரச்னையாகக் கருதிய ஹக்கீம் இதனைத் தீர்க்க புதுமுயற்சி ஒன்றைக் கையிலெடுத்துள்ளார். தனது லாரியில் மண மேடையை வடிவமைத்து, மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட்டும் அமைத்துள்ளார். ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட சுபகாரியம்போல் நடத்திடும் வகையில், தனது லாரியை வடிவமைத்திருக்கும் ஹக்கீமின் முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Mobile wedding hall  திருப்பூர் செய்திகள்  நடமாடும் திருமண மண்டபம்  உடுமலைப் பேட்டை நடமாடும் திருமண மண்டபம்  Udumalpet
லாரியில் வடிவமைக்கப்பட்டுள்ள மணமேடை

கரோனா ஊரடங்கு காலத்தில் சுப காரியங்களை விமரிசையாக நடத்த முடியவில்லேயே என்று பொதுமக்கள் வருத்தத்தில் இருந்தநிலையில், உடுமலை மேடை அலங்கார கலைஞர் ஹக்கீமின் புதுமுயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: அறுந்து கிடந்த மின் கம்பி... வாகன ஓட்டிகளை எச்சரித்த பெண்.. வீடியோ வைரல்!

Last Updated : Jul 14, 2020, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.