திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் பூளவாடி என்ற கிராமத்தில் பிறந்து சுமார் 75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதி, சாகித்ய ரத்னா விருதும் பெற்றவர் உடுமலை நாராயணகவி. இவரின் 119ஆவது பிறந்தநாள் விழா கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டியுள்ள இவர், தமிழுக்கு செய்துள்ள தொண்டுகள் ஏராளம். மேலும், இன்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் தனியரசு எம்எல்ஏ, திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு - அமைச்சர்