திருப்பூர் பெரியகடை பகுதியை சேர்ந்த பஷீர் பிரிண்டிங் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவரின் இரு மகன்கள் சபீர் (11), சாகிப் (7) ஆகியோர் நேற்று நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இருவரையும் காணவில்லை என நேற்றிரவு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்.12) சுகுமார் நகர் பகுதியில் நொய்யல் ஆற்றில் இருவரின் உடல்களும் மிதந்தன.
இதையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க... மலையடி பள்ளத்தில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!