கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்துவருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீரால் நிரம்பி வழிகின்றன. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள குட்டையிலிருந்து ஆமை ஒன்று வழி தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் தஞ்சம் புகுந்தது. இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள், ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திடீரென ஆமை அலுவலகத்திற்குள் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மஞ்சள் நிற ஆமை