காசநோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுவதும் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை தொடங்கிவைத்துள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கான காசநோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த வாகனத்திற்குள் காசநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:2025க்குள் காசநோய் இல்லாத இந்தியா - மத்திய அரசின் திட்டம் பலிக்குமா!