ETV Bharat / state

சோதனைச்சாவடியில் நிற்காத கண்டெய்னர் லாரி: துரத்திச் சென்ற காவலர் உயிரிழப்பு! - சோதனைச் சாவடியில் நிற்காத லாரி

திருப்பூர்: சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதியதில் உயிரிழந்தார்.

காவலர்
காவலர்
author img

By

Published : Jun 30, 2020, 1:37 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த பிரபு (25) 2018ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். தற்போது காங்கேயம் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தார். நேற்றிரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே ஈரோடு மாவட்டம் நொய்யல் சோதனைச்சாவடியில் கண்டெய்னர் லாரி ஒன்று பேரிகார்டுகள் மீது மோதி தள்ளியபடி நிற்காமல் வேகமாகச் சென்றது. இது குறித்து காவல் துறையினர் திட்டுப்பாறை சோதனைச்சாவடிக்குத் தகவலளித்தனர்.

இதையடுத்து, அந்தக் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிக்க காவல் துறையினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திட்டுப்பாறை சோதனைச்சாவடியிலும் நிற்காமல் சென்றது.

இதைத் தொடர்ந்து சோதனைச்சாவடியில் பணியிலிருந்த பிரபு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு லாரியை மடக்கிப் பிடிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே லாரி ஓட்டுநர் வேறு பாதையில் ஈரோடு நோக்கிச் சென்றார். ஆனால் காங்கேயம் பகுதி காவல் துறையினர் லாரியை துரத்தி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (40) என்பதும் குடிபோதையில் அவர் லாரியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் காவல் துறையினர் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களுக்கு நவீனங்களின்றி எட்டாக் கனியான கல்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.