ETV Bharat / state

ஜெப கூடத்தை அகற்றக்கோரி இந்து முன்னணி போராட்டம் - protest

திருப்பூர்: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக  கட்டப்பட்டுள்ள ஜெப கூடத்தை அகற்றக்கோரி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணி கட்சியினர் போரட்டம்
author img

By

Published : Jul 3, 2019, 10:47 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கெரட முத்தூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஜெப கூடத்தை அகற்றக்கோரியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மதம் மாறி கிறிஸ்தவர்கள் சலுகைகளை அனுபவித்து வரும் சலுகையை ரத்து செய்யக்கோரியும், ஜாதி மத மோதல்களை தூண்டிவிடும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல்லடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், புகார் குறித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணி கட்சியினர் போரட்டம்

பின்னர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமீபகாலமாக கிறிஸ்தவர்களின் மதமாற்றச் சர்ச்சைகள் அதிக அளவில் பெருகி வருகிறது. கூரை வீடுகளில் கூட பைபிள் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறார்கள். இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே அரசு அலுவலர்கள் இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளனர்" என்றார்.

Intro:கெரட முத்தூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள ஜெபக் கூடத்தை அகற்றக் கோரி இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கெரட முத்தூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஜெப கூடத்தை அகற்ற கோரியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கத்தை ஏமாற்றி அனுபவித்து வரும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் சலுகைகளை ரத்து செய்யக் கோரியும் ஜாதி மத மோதல்களை தூண்டிவிடும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உடன் பல்லடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இந்து முன்னணியினர் அளித்துள்ள புகார் குறித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில் சமீபகாலமாக கிருத்துவர்களின் மதமாற்றச் சர்ச்சைகள் அதிக அளவில் பெருகி வருகிறது கூரை வீடுகளில் கூட பைபிள் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக கெரட முத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்த சர்ச் மற்றும் அதனை சுற்றி காம்பவுண்ட் கட்டப்பட்டுள்ளது இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாகவே இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஆனால் அரசு அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார் அதன் அடிப்படையில் இந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.